Friday, July 1, 2016

இனி ...

நெடுங்காலமாக முயன்று வரும் இத்திட்டப்பணியின் அடுத்தக் கட்டமாக வலைத்தளம் உருவாக்கப்பட்டு, செய்திகள், தரவுகள் அதில் பதியப்படுகின்றன.

பகிருங்கள் ...

Sunday, January 13, 2013

தைத்திருநாள் ....




எமக்கு தோளோடு தோளாக நின்று உயிர் கொடுக்கும் தோழமைகளுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழா (ல்) இணைவோம் ,
தமிழால் உயர்வோம் ... !!!!


-  கற்றது தமிழ் திட்டப்பணி குழு தோழமைகள்

( இது ஒரு வளரும் இணைய படைப்பாளிகள் குழுமத்தின் அரும்முயற்சி )

Tuesday, November 29, 2011

' கற்றது தமிழ் '

அன்பு உறவுகளுக்கு வணக்கம் ,
நலமறிய ஆவல் .
வெளிநாட்டு கல்வி , வெளிநாட்டு மொழியில் படிப்பு , வெளிநாட்டு மதிப்பில் இந்திய சம்பளம் , நுனி நாக்கு ஆங்கிலம் , இலகரங்களில் ஊதியம் , உயர் பதவிக்காக நாள் விடாது உழைத்தல் என இயந்திரத்தனமாக  மாறிவிட்ட நம் அனுதின வாழ்க்கை சூழலில்  ,

' கற்றது தமிழ் ' வலைத்தொடர்பு ,
தனிநபரின் சுயலாபத்திற்காக இல்லாமல் , ஒரு குழுவாய் இணைந்து தமிழனாய் தமிழை தமிழில் அனைவருக்கும் சொல்வதற்காக உருவாக்கப்பட்டது !!!

' கல்தோன்றி மண்தோன்றா ' காலத்து புகழுடைய நம் தமிழ் மொழியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டும் , உலகெங்கும் செறிந்து வாழும் நம் தமிழ் உறவுகள் மற்றும் தமிழின் மேல் தீராத அன்பு கொண்ட மற்ற மொழியினரின் பொருட்டும் , 
' தமிழ் மொழியின் பெருமை , தமிழரின் வரலாறு , நாகரீகம் , பண்பாடு , கலாச்சாரம் , மருத்துவம் , இலக்கியம் , கலைகளை ' உள்ளடக்கிய திட்டமொன்றினை உலகளவில் கொண்டு செல்லும் பொறுப்பினை ஏற்க உறுதி பூண்டிருக்கிறோம் .


நம்மினத்தை , பழம் பெருமைக் கொண்ட நம் பாரம்பரியத்தை உலகரங்கில் தனித்துவத்துடன் நிலைநிறுத்த , இளைய தலைமுறையினரான நாங்கள் எம் தமிழ்ப் பெரியோருடனும் , தொழில் , இணைய , மொழி வல்லுனர்கள் ,  உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ் இளையோர்கள் உட்பட ஏனையோரும் , இணைந்து செயல்பட மிக்க விருப்பமும் ஆவலும் கொண்டிருக்கிறோம் .


  .
எனவே ,
இது குறித்து உங்களின் ஆலோசனைகளையும் , ஐயப்பாடுகளையும்  உங்களால் எவ்வாறு இதற்கு ஆதரவு கொடுக்க முடியும் என்பதையும் கீழ்க்காணும் சுட்டியில் கருத்திடவும். தொண்டுள்ளத்தினராக , நல்கை வழங்குபவராக இணையவும் ,  மேலதிக தொடர்புகளுக்கும் மின்னஞ்சல் அனுப்புக...


மின்னஞ்சல் முகவரி : g3creatives@sify.com ...

' பேஸ்புக்கில் ' தொடர்பு கொள்ள : www.facebook.com/pissasukutty


[ செயற்படுத்துதல் மற்றும் திறன் : 100 % THaMIzH - தமிழ் திறன் வழங்கி ]
[ செயற்பாட்டில் உறுதுணை :
வளரும் இணைய படைப்பாளிகளின் குழுமம் .
( http://www.facebook.com/groups/189275494455233/ ) ]